tamilnadu

img

வேலையிழக்கும் ஆட்டோ மொபைல் துறையினர்

ராஜ்கோட்:
இந்தியாவில் வாகன விற்பனை வீழ்ச்சியால், ஆட்டோ மொபைல் துறையில் பல ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்புக்கு ஆளாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியிலுள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில், கடந்த45 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந் துள்ளனர்.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகன விற்பனை பெருமளவில் குறைந்து வருகிறது. 2019 ஜூன்மாதம் வரையிலான காலாண்டில் மட்டும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் புகழ்பெற்ற வாகன நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியையே அடியோடு நிறுத் தும் நிலைக்குச் சென்றிருக்கின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தற்காலிக மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு பணிவழங்கப்படவில்லை. பல தொழிற்சாலைகளில் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.முன்மாதிரி மாநிலம் என்று பாஜகவினர் ஜம்பம் அடிக்கும், குஜராத் மாநிலத்தில், அதுவும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு பெயர்போன ராஜ்கோட் நகரில் ஏராளமான ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இங்குள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் உதிரிபாகங்கள் தயாரித்து அவற்றை வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கக் கூடியவை ஆகும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உதிரிபாக கொள்முதலை முழுவதுமாக நிறுத்தி விட்டதால், ராஜ் கோட்டைச் சேர்ந்த உதிரிபாக தயாரிப்புத் தொழிற்சாலைகள் பல மூடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இன்னும் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் பணிநாட்களை குறைத்துள்ளன. 

ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உதிரிபாகங்கள் விற்பனையாத நிலையில், புதிதாக உற்பத்திக்கு எங்கே போவது? என்கிறார், இந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பரேஷ் வசானி. இவரது நிறுவனம் மூன்று ஷிப்டுகள் இயங்கிய நிலையில், தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகிறது.ஒட்டுமொத்தமாக பார்த்தால், கடந்த45 நாட்களில் ராஜ்கோட் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவை தவிர, இந்த உதிரிபாக தொழில் நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும்அவர்களின் கீழ் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.பல ஆட்டோமொபைல் முகவர்கள்,தங்களின் விற்பனை நிலையங்களை மூடியுள்ளனர். வேறு சில முகவர்கள்தங்களிடமுள்ள வாகனங்களை விற்கும்வரை மட்டுமே விற்பனை நிலையங்களை தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். எந்தவொரு முகவரும் புதிய வாகனங்களுக்கு ஆர்டர் வழங்கவில்லை. 

எனவே, “வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் இல்லாததால், அந்த நிறுவனங்கள் வேலைக்கு புதிதாக ஆட்களை அமர்த்துவதை அடியோடு நிறுத்தி விட்டன; ஏற்கெனவே உள்ள பணியாளர்களும் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்” என்றுகூறுகிறார், இந்திய ஆட்டோ மொபைல்உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ராஜன்வதேரா. மேலும், மத்திய அரசு கூறியபடி மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் ராஜன் வதேரா, இந்த புதிய பணி
யையும் உடனடியாக தொடங்க முடியாது என்பதால், ஏற்கெனவே உள்ள ஊழியர்களுக்கு என்ன பணி வழங்குவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நெருக்கடியான கட்டத்தில்,ஆட்டோமொபைல் துறையின் எதிர் காலத்தையும், அதில் பணியாற்றும் 3 கோடியே 70 லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தங்களுக்கு உதவ வேண்டும்; குறிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் ராஜன் வதேரா வலியுறுத்தியுள்ளார்.

;